2021இல் நாம் எப்படி ஆரோக்கியமாக இருப்பது???


                    இன்றய காலகட்டத்தில் நம்முடைய ஆரோக்கியத்தின்மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயம். ஆரோக்கியத்தின் மீது கவனம் வேண்டும் என்றவுடன் நமக்கு தோன்றுவது ஜிம்மிற்கு போவது, விலை உயர்ந்த சத்தான உணவுகளை சாப்பிடுவது என்பது போல தோன்றும். ஆனால் அது உண்மை இல்லை.                    

Pic-1: WorkOut

                    நாம் அன்றாட வாழ்க்கையில் செய்யும் செயல்களான நடப்பது, வேலை செய்வது, விளையாடுவது, தூங்குவது இதுபோன்ற செயல்களை சரியான முறையில் செய்தாலே உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு என்று நாம் எதிலும் அதிக ஈடுபாடு செலுத்த தேவை இல்லை.

Pic-2: Yoga

                    நாம் அன்றாட வாழ்க்கையில் செய்யும் 10 செயல்களில் சில மாற்றங்களை கொண்டுவருவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

1-சுத்தமான தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.

Pic-3: Water


                    மனித உயிரின் ஆதாரமாக இருப்பது தண்ணீர்தான். நமது உடல்  80 சதவிகிதம் நீர் நிரம்பியது.  
  • பெரியவர்கள் ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • குழந்தைகள் ஒரு நாளைக்கு 1-2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

 தண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலம்,

Pic-4: Water Drinking
  •  உடலின் வேண்ப்பநிலை சீராக இருக்கும். 
  •  நம் உடம்பில் உள்ள நச்சுக்களை அகற்றி ஹோமியோஸ்டேஷிஷை பராமரிக்கிறது.
  • உடல் சருமத்தை பளபளப்பாக்குகிறது.
  • சிறுநீரகங்களுக்கு உதவுகிறது.
  • ஆரோக்கியமாக இருக்க செய்கிறது.


2-ஆரோக்கியமான காலை உணவு.

Pic-5: Breakfast

                    காலை உணவை தவிர்ப்பவர்கள் ஆதிக்கம் சாப்பிடுபவர்களாக இருப்பார்கள் என்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. அதேபோல காலை சாப்பிடாமல் இருந்து மதிய வேளையில் அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு அதிக தீங்கை வரவழைக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.


Pic-6: Startup for Breakfast

                    காலையில் உணவு சாப்பிட்டு பலகாதவர்கள், காலையில்  பழவகைகள், முட்டை, பால்  சாப்பிட்டு பழகுவதால் மூலம் காலை உணவை தவிர்ப்பதிலிருந்து வெளிவர முடியும். 



3-அதிகமாக சாப்பிட வேண்டும்.

Pic-7: Eat Well

                    இப்போது உங்களுக்கு சந்தேகம் வரலாம், இதற்கு முன் தான் பார்த்தோம் அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு தீங்கானது என்று. பின்பு இப்போது அதிகமாக சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார்களே. குழப்பம் வேண்டாம் இதோ சொல்லிவிடுகிறேன்.


Pic-8: Avoid Junk Food


                     நாம் மூன்று நேரம் சாப்பிட வேண்டும். காலை, மதியம், இரவு. இந்த மூன்று நேரமும் நமது வயின்றின் பசி தீரும் வரை சாப்பிட வேண்டும். ஒரு நேரம் அதிகமாக சாப்பிட்டுவிட்டு அடுத்த நேரம் சாப்பிடாமல் இருக்க கூடாது. இதை கவனத்தில் கொண்டு நன்றாக சாப்பிட வேண்டும்.



4-நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும்.                       

Pic-9: Eat at The Right Times

                    அதிகாலை உணவு மிகவும் முக்கியமானது. அன்றய நாளை சிறப்பாக கடப்பதற்கு, ஆரோக்கியமாக இருப்பதற்கும், சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகிறது.  காலை உணவை 73:00am to 8:30am இந்த மணிநேரத்திற்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதும் அந்த உணவு மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும்.

Pic-10: Healthy Breakfast

                    

                    மத்திய நேர உணவு மிகவும் முக்கியமான உணவு நேரம் ஆகும். மத்திய நேர உணவினை மிக கவனமாக தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இது நாம் செய்யும் வேலையை பொறுத்தது. மத்திய நேர உணவுதான் அதிகமான பசியுடன் நாம் சாப்பிட போகும் உணவு நேரம். இந்த உணவை மதியம் 12:30pm to 1:30pm இந்த நேரத்திற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும்.
Pic-11: Lunch

                    இரவு நேர உணவை மிகவும் ஆரோக்கியமாக அமைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். ஏனென்றால் இந்த உணவுத்தன் இரவு நேரம் முழுவதையும் நமக்கு ஆரோக்கியமாக வைத்துகொள்ளப்போகிறது.

Pic-12: Dinner

                    இந்த இரவுநேர உணவை 7:30pm to 8:30pm இந்த நேரத்திற்குள் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது. இரவு நேரத்தில் தின்பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது இரவில் தூங்கும்போது ஜீரண தொந்தரவுகளை தவிர்க்கலாம். இரவில் உணவு சாப்பிட்டபின் 2மணிநேரத்திற்கு பிறகுதான் தூங்க செல்ல வேண்டும்.



5-இறைச்சியை குறைத்து சாப்பிடுவது நல்லது. 

Pic-13: Meat vs Veg


                    நாம் உண்ணும் உணவு மிக ஆரோக்கியமாக உள்ளதா என்பதை தெரிந்து வைத்திருப்பது மிக முக்கியமான ஒன்று. நாம் என்ன சாப்பிடுகிறோம் அதில் என்ன சத்து உள்ளது என்பதை தெரிந்து வைத்து சாப்பிடுவது அவசியம்.

Pic-14: Meat


                    இறைச்சி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதில் அதிக புரத சத்துக்கள். வைட்டமின், தாது பொருட்கள் அதிகம் உள்ளன. அனால் இறைச்சி அதிகம் சாப்பிடுவதாள் உடலில் அதிக கொழுப்புகள் சேர்கின்றன. அது மட்டும் இல்லாமல் இறைச்சி அதிகம் சாப்பிடுவதால் மனதளவில் இது தீய மாற்றத்தை கொண்டு வருகிறது.

Pic-15: Meat to Veg


                    இன்றய நாம் வாழும் காலகட்டத்தில் நாம் அனைவரும் இறைச்சியிலேருந்து காய்கறிகள் பக்கம் செல்வது நமது உடலுக்கும் நமது வருங்கால சந்ததியினருக்கும் நல்லது. இறைச்சியை சாப்பிட்டு பழகியவர்கள் கொஞ்சமாக சைவ உணவுகளை சாப்பிட ஆரம்பித்து பழகலாம். மாவுச்சத்து இல்லாத காய்கறிகளை கொண்டு சமைத்து சாப்பிடுவதை அதிகமாக எடுத்து கொள்வது உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை தரும். கிழங்கு வகைகள், கீரை வகைகள், தானிய வகைகள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

                    வத்திற்கு நேரத்திற்கும் ஏற்றாற்போல் உணவு முறையும் உணவின் அளவும் மாறுபடும். இதை கவனத்தில் கொண்டு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.




6-உணவின் உள்சாத்துக்களை அறிந்து சாப்பிட வேண்டும். 

Pic-16: Know The Ingredient Before Eat.
                
                    நாம் இதுவரை பார்த்ததுபோல் உணவு என்பது நமது வாழ்விற்குள் நமது உயிர்க்கும் அவசிய அடிப்படையாகிய ஒன்று. இதை நாம் மிகவும் கவனமாகவும், தெரிந்தும் இருக்க வேண்டிய விஷயம். எந்த நேரம் எந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும், எந்த உணவை எவ்வளவு சாப்பிட வேண்டும், எந்த நேரத்தில் உணவை சாப்பிடவேண்டும் எனது மிக அவசியமான ஒன்று.


Pic-17: To Eat For Healthy

                    இந்த 6 செயல்களையும் நாம் நடைமுறையில் கொண்டுவந்து விட்டால் நமது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்.


            1-சுத்தமான தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.
            2-ஆரோக்கியமான காலை உணவு.
            3-அதிகமாக சாப்பிட வேண்டும்.
            4-நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும்.  
            5-இறைச்சியை குறைத்து சாப்பிடுவது நல்லது. 
            6-உணவின் உள்சாத்துக்களை அறிந்து சாப்பிட வேண்டும். 

Pic-18: Be Happy With Vegetables







Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *