நாம் வேலைக்கு செல்வது, பணத்தை சம்பாதிப்பது, சேர்த்துவைத்து, ஆசைப்படுவது, இது அனைத்திற்கும் நமது உடல் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். நமது உடலின் மேல் அதிக கவனத்தை செலுத்தியாக வேண்டும். அவ்வாறு உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். உடற்பயிற்சி என்றதும் அதிக நேரம் எடுத்து செய்யும் வேலை என்று நினைத்துவிட வேண்டாம். இப்போது நாம் உடற்பயிற்சி செய்வது பற்றி தெரிந்து கொள்ள போவதில்லை, உடற்பயிற்சிக்கான திட்டத்தைத்தான் தயார்செய்ய போகிறோம்.
Pic-1: Planning
1- உடலின் தோற்றமும் அமைப்பும்.
நமது தோற்றத்தை வைத்தே நாம் யாராக இருக்க முடியும் என்று நமக்கு முன் நிற்பவர் முடிவு செய்கிறார். நாம் செய்யும் வேலைக்கு ஏற்றாற்போல் நமது தோற்றமும் அமைய வேண்டும். ஒரு பிச்சைக்காரன் தனது மோசமான தோற்றத்தினால்தான் பிட்சை பெறுவான். கார் விற்பனையாளர் தனது சுத்தமான வாடிக்கையாளருக்கு ஏற்ற வசதிகளை வைத்திருப்பதன் மூலமும் பலனடையலாம். தோற்றம் என்பது மிக முக்கியமானது.
Pic-1: Show Themselves
நாம் பிறர்முன் எப்படி தோண்றுகிறோம், ஒரு செயலை செய்கிரோம், சூழ்நிலைகளை எப்படி கையாள்கிரோம், எப்படி உடை அணிகிரோம் என்பவைகளை பொறுத்ததே பிறரின் நினைவில் நாம் எப்படி என்பது. நமது தோற்றத்தில் நாம் அணிகிற ஆடையே 80% நாம் எப்படிப்பட்டவர் என்பதை காட்டுகிறது.
Pic-2: Dressing Sense
நாம் இப்போது ஆடைகளை பற்றி பார்க்க போவதில்லை. ஆனால் தோற்றத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்திருக்க வேண்டும் இல்லையா. சரி, உடலின் தோற்றத்தை பற்றி பார்த்துவிட்டோம். உடலின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும், என்பதை பற்றி பார்ப்போம். உடலின் ஆரோக்கியமான அமைப்பிற்கு நாம் சிறிது வியர்வை சிந்தும் முயற்சிகளைத்தான் செய்தாக வேண்டும்.
Pic-3: Exercise
நமது உடலின் ஒவ்வொரு பகுதியும் தன்னுடைய ஆரோக்கியமான அமைப்பை அடைய அந்த பகுதிக்கென்று தனி தனியான உடற்பயிற்சியும் உள்ளது, ஒரே நேரத்தில் ஒரு பயிற்சி செய்வதன் மூலம் அனைத்து உடற்பகுதிகளும் பலப்படுகின்ற உடற்பயிற்சியும் உள்ளது. நீச்சல், நீண்ட நேரம் ஓடுவது, ஸ்கிப்பிங் செய்வது போன்ற பயிற்சிகள் உடலின் அணைத்து பகுதியையும் பலப்படுத்துகிறது.
Pic-4: jump rope
2- உடலின் எடை.
உடலின் எடை அதிகமாக இருந்தால் உடலின் தோற்றமும் பெரிதாக இருக்கும். நமது தோற்றம் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் பார்த்தோம்.
Pic-5: Body Weight
நமது எடை அதிகமாக இருந்தாலே நமது உடலுக்கு ஆபத்து என்று அர்த்தம் இல்லை. நமது உடலின் கொழுப்பு எவ்வளவு இருக்கிறது, தேவையான கொழுப்பு, தேவையற்ற கொழுப்பு போன்றவை எவ்வளவு உள்ளது. அதுமட்டும் இல்லாமல் நமது உடலுக்கு தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்றவை தேவையான அளவு இருந்து இதன்மூலம் நமது உடலின் எடை அதிகரித்தால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்த வாய்ப்புகள் குறைவு.
Pic-6: Body Transform
இதிலிருந்து நமக்கு தெரியவருவது, உடலின் ஆரோக்கியத்திற்கு நமது உடல் பெரிதாகவோ, மெலிந்த உடலோ காரணமாக இருக்காது. நமது உடலின் ஆரோக்கியத்திற்கு நமது உடலின் தேவைக்கு ஏற்ற சத்துக்கள் உள்ளதா என்பதைத்தான் பார்க்க வேண்டும். BRUCE LEE இவரைப்பற்றி அனைவருக்கும் தெரியும். அவரது உடலின் எடையும், தோற்றத்தில் மிகவும் பெலிந்துதான் இருப்பார். ஆனால் அதிக பலம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
Pic-7: Bruce Lee
3- பல உடற்பயிற்சிகள்.
ஒரே செயலை செய்வதன்மூலம் உடைந்த ஒரு தசை பகுதிதான் பலப்படும் என்பதை பார்த்ததும். நீண்ட நேரம் ஓடுவதன்மூலம் உடலின் பல பகுதிகள் பயிற்சியடையும். ஆனால் அதை மட்டும் தொடர்ந்து செய்வதன்மூலம் உடலுக்கு கிடைக்கும் பலனைவிட நீண்டநேரம் நீச்சல் பழகுவது, நீண்டநேரம் Cycling செய்வது, Push Ups, Pull Ups, தண்டால் எடுப்பது போன்ற சின்ன சின்ன பயிற்சிகளில் ஆரம்பித்து இன்னும் பல பயிற்சிகள் செய்வதன்மூலம் இன்னும் கூடுதலான ஆரோக்கியத்தை உடலுக்கு உங்களால் பெற்றுக்கொடுக்க முடியும்.
Pic-8: Multiple Exercise
உடலில் உள்ள தசைகளின் இணைப்புகளை அதன் அமைப்பிற்கு ஏற்றாற்போல் சுழற்றுவது, சிறிய அளவிலான எடையை துருக்கி பயிற்சி செய்வதன்மூலம் தசைகள் புலப்படுகின்றன. அவ்வாறு செய்வதன்மூலம் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள், உடலுக்கு தேவையில்லாதவைகள் வியர்வைமூலம் வெளியேற்றப்படுகின்றன.
4- கவனம் தேவை.
நாம் மேலே பார்த்ததுபோக இன்னும் பல வழிகளில் நமது உடலை ஆரோக்கியமாகவும், தசைகளை பலத்துடனும் வைத்துக்கொள்ள முடியும். ஆனால் அவற்றை கவனமாகவும் புத்திசாலித்தனமாகவும் செய்தல்வேண்டும்.
Pic-9: Do Carefully
முதலில் செய்கின்ற பயிற்சியை நாம் சரியாகத்தான் செய்கிறோமா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி செய்யும்போது அதிக வியர்வை வெளியேறும் என்று பார்த்தோம் அல்லவா, எனவே தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இல்லையென்றால் தலைசுற்றல், தலைவலி அதிகம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஒரு பயிற்சி செய்ததும் அடுத்த பயிற்சி செய்வதற்கு முன் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொல்லுங்கள்.
தினமும் குறைந்தது 30 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்தால் போதும். நமது உடல் வெப்பமடைந்து வியர்வையை வெளியேற்ற குறைந்தது 15 நிமிடங்களாவது ஆகும்.
5- சுறுசுறுப்பு தானாக வராது, அதை அமைத்துக்கொள்ள வேண்டும்.
எந்தஒரு செயலை நாம் செய்தாலும் அதை விருப்பப்பட்டு ஏற்றுக்கொண்டு அதில் முழு ஈடுபாடு கொண்டு செய்து முடிக்க வேண்டும். வேகமாகவும், புத்திசாலித்தனத்துடனும், ஆரோக்கியமானமுறையில் அதை செய்து முடிக்க வேண்டும்.
Pic-10: Be Active
நாம் செய்வதற்கென்று வீட்டு வேலையோ, அலுவலக வேலையோ எதுவக்க வேண்டுமானாலும் இருக்கலாம், அதை சுறுசுறுப்பாக செய்வதன்மூலம் நமது உடலும், மனதும் சோர்விலிருந்து வெளிவந்து புத்துணர்ச்சியும்,சக்தியும் அடைகிறது.
Pic-11: Be Active
மேலே நாம் பார்த்த இந்த 5 செயல்களில் கவனம் செலுத்தி நமது தனிப்பட்ட வாழ்க்கையில் இதனை நமது வாழ்க்கை சூழலுக்கு ஏற்றாற்போல் நடைமுறை படுத்துவதன்மூலம் நமது உடலை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளலாம்.
1- உடலின் தோற்றமும் அமைப்பும்.
2- உடலின் எடை.
3- பல உடற்பயிற்சிகள்.
4- கவனம் தேவை.
5- சுறுசுறுப்பு தானாக வராது, அதை அமைத்துக்கொள்ள வேண்டும்.