நம் உடல் பலம், மனதின் சக்தி இவற்றை தெரிந்துகொள்ளவும், அவற்றை பயன்படுத்த உதவுவதெ யோகா.
ஆசை:
மனிதனாக பிறந்தாள் ஆசை இருக்கத்தான் செய்யும். இல்லாத ஒன்றின்மேல் ஆசை வருவதில்லை. பள்ளிக்கூடம் இருப்பதால் படிப்பதற்க்கு ஆசை, பல அடுக்குமாடி வீடுகள் இருப்பதால் தனக்கும் வேண்டும் என்ற ஆசை, விமானத்தில் பலர் செல்வதால் தனக்கும் ஆசை. பொதுவாக இப்படிச் சொல்வார்கள் ” ஆசைதான் துன்பத்திற்க்கு காரணம் ” என்று. ஆசைகளை நினைத்து நினைத்து அதை அடைய முடியவில்லை என்றபோது மனதில் ஏற்படுவது துன்பம் என எடுத்துக்கொள்ளளாமா?…
எப்படி ஆசையை நிறைவேற்றிக்கொள்வது?
எள்ளோரும் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். அவர்களது உடல் பலத்தையும் மன சக்தியையும் கண்டறிந்து அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்துகொண்டால். ஒருவர் செய்யும் செயலோ அல்லது ஒருவர் வைத்திருக்கும் பொருளை அதை பார்த்த பின்பு தனக்கும் அவ்வாறு வேண்டும் என்று தோன்றுவதை ஆசை. வீட்டிற்கு உள்ளே இருந்து கொண்டு வீட்டிற்கு வெளியே போகவேண்டும் என்று நினைத்தாலும், சிந்தித்தாலும், பேசினாலும் பயன் இல்லை.
பயணம்:
வீட்டை விட்டு வெளியே சென்று விட வேண்டும். அதேபோல்தான் தனக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு அது எங்கே இருக்கிறது எப்படி பெறுவது அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டு அதை நோக்கி பயணம் செய்ய வேண்டும். இவ்வாறான பயணம் இருட்டான இடத்தில் பயணம் செய்வதுபோல். நம் முன் இருப்பது என்ன என்று நமக்கே தெரியாது. அவ்வாறான பயணமானது நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோமோ அதற்கு தேவையான விஷயங்களை ஏற்றுக்கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள நமது மனமும் நமது உடலும் தயாராக இருக்கிறதா என்பதுதான் இதில் முக்கியமானது.
உடலும், மனமும் :
அவ்வாறு இருட்டான இடத்தில் பயணம் செய்வதற்கு வெளிச்சமாக இருப்பது உடல் பலமும் மனதில் சக்தியும்தான்.உடலும் மனமும் ஒரு வாகனத்தின் இரு சக்கரங்கள் போல் செயல்பட வேண்டும் அது அவ்வாறு செயல்பட்டால் நாம் ஆசைவைத்ததை அடைய முடியும். அவ்வாறு மனம் சொல்வதை உடல் கேட்டு, உடலின் தேவையை அறிந்து மனதும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நாம் ஆசை வைத்ததை அடைய விதி வழிவிடும். ஆரோக்கியமான மனமும் ஆரோக்கியமான உடலும் இருந்தால், ஆரோக்கியமான வாழ்க்கையும் ஆசைப்படுகிற வாழ்க்கையும் நம்மை வந்து சேரும். எவ்வளவு பெரிய ஆசையாக இருந்தாலும் அதை அடைவதற்கு உதவுவது ஆரோக்கியமான மனமும். ஆரோக்கியமான உடலும்தான். இந்த ஆரோக்கியமான உடலையும் மனதையும் நாம் அடைய உதவும் வழி யோகா.