வார்ம் அப் செய்வது எதற்காக ???
“தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மேய்வருத்தக் கூலி தரும் “
“No Pain No Gain”
இது போன்ற வாசகங்களை உடற்பயிற்சி நிலையங்களில் அதிகமாக பார்க்கமுடியும். உடலை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனுடைய கடமை ஆகும். வார்ம் அப் என்பதை தமிழில் ஆயத்தப் பயிற்சி என்று சொல்லலாம். உடற்பயிற்சி செய்வதற்க்கு முன்னும், உடற்பயிற்சி செய்த பின்னும் வார்ம் அப் செய்ய வேண்டும். வார்ம் அப் செய்யாமல் உடற்பயிற்சி செய்வதனால் உயிர் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அதிகமான எடை தூக்குவது, உடலுக்கு கடினமான செயலை செய்வதற்கு முன் உடலில் உள்ள தசைகள், தசை இணைப்புகள் போன்றவற்றிக்கு இரத்தத்தில் இருந்து நியூட்ரிஷியனை செல்களுக்கு செலுத்தி அதை பலப்படுத்துவதற்கு வார்ம் அப் பயன்படுகிறது. அவ்வாறு வார்ம் அப் செய்யாமல் அதிகமான எடை தூக்குவதன்மூலம் உடல் தசைகள், தசை இணைப்புகள், இதயம் இவற்றிக்கு இரத்தத்தின் வேகம் படி படியாக அதிகரிக்காமல் வேகமாக செல்வதால் தசைகள், இதயம் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
வார்ம் அப்பின் வகைகள்???
வார்ம் அப்பில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு விளையாட்டிற்கும் தனித்தனி வார்ம் அப் உள்ளது. எப்போது உடற்பயிற்சிக்கு தேவையான வார்ம் அப் பற்றி மட்டும் பார்ப்போம். இதில் முக்கியமாக மூன்று வகை உள்ளது. எதை எந்த உடற்பயிற்சி செய்வதற்க்கு முன்னும் செய்ய வேண்டிய வார்ம் அப்.
- Dynamic Stretching
- Movement Patterns
- Light Cardio
1.Dynamic Stretching
உடற்பயிச்சி செய்வதற்கு முன் செய்ய வேண்டிய முக்கியமான வார்ம் அப் இது. உடலில் உள்ள தசைகளுக்கு பயிற்ச்சி கொடுப்பது ஆகும்.
இந்த பயிற்சியில் உடலில் உள்ள தசைகள், தசை இணைப்புகள் பலப்படுகிறது. இதை செய்யும்போது இரத்தத்தின் வேகம் சீராக அதிகரிக்கிறது. இரத்தத்தில் உள்ள நியூட்ரிஷன் சீராக செல்களில் சேர்ந்து பலப்படுகிறது .
2.Movement Patterns
கைகளையும், கால்களையும், மற்ற தசை பகுதிகள், தசை இணைப்புகள் அனைத்தையும் சீரான முறையில் திருப்பி, சுழற்றி பயிற்சி செய்ய வேண்டும்.
கைகளை, கால்களை சுழற்றும்பொது அதன் PATTERN சரியாக இல்லாவிட்டால் தசைகள் காயம் பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
3.Light Cardio
உடற்பயிச்சியில் மிகவும் முக்கியமான வார்ம் அப்களில் எதுவும் ஒன்று. மெதுவாக ஓடுவது, குதிப்பது, PULL UPS, PUSH UPS இதுபோன்ற வார்ம் அப் உடற்பயிற்சி செய்வதற்குமுன் முக்கியமாக செய்ய வேண்டும்.
உடற்பயிற்சிக்கு தேவையான அதிகமான சக்தி கிடைக்கிறது. இந்த பயிற்சியின் மூலம் உடலிலிருந்து அதிகமான வியர்வை வெளியேறுவதால் உடலுக்கு பல நன்மைகள் உள்ளன.
வார்ம் அப் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு தசை பகுதிக்கும் அதிக வார்ம் அப் பயிற்சி உள்ளது.
- CHEST WARM UPS
- LEG WARM UPS
- ABS WARM UPS
- SHOULDER & BACK WARM UPS