வாகனத்தின் நிலைமையைப் பொறுத்துதான் நம் பயணமும் அமைகிறது. வாகனம் சொகுசாக இருந்தால், நமது பயணம் சொகுசாக அமையும். அதே போல்தான் நமது உடல். நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் அதில் மனமும் ஆன்மாவும் சேர்ந்து நீண்ட நாட்கள் இந்த பூமியில் பயணம் செய்யலாம். நமது உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே நமது வாழ்நாள் எந்த நிலையில் இருக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். உடல், மனம் இவற்றைப் பற்றிய தெளிவான புரிதலை போன அத்தியாயமான “யோகா பற்றிய சில குறிப்புகள்” என்ற தலைப்பில் நாம் முழுமையாக தெரிந்து கொண்டிருந்தோம். ஒரு பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றியயோ அல்லது ஒரு பொருளைப் பற்றியும் நமக்குத் தெரியாமல் இருக்கும் போதும் அதன் மீது நமது கவனம் இருக்காது. இதைப் போன்று, மனம் என்றால் என்ன, உடல் என்றால் என்ன, அது எவ்வாறு இயங்குகிறது, அது ஆரோக்கியமாக இருந்தால் நமது எதிர்காலம் ஆரோக்கியமாக இருக்கும். இதை பற்றி தெரிந்து இருந்தும் நாம் அதை திறம்பட நடைமுறையில் பழக்கப்படுத்தா விட்டால் நமது எதிர்காலம் எவ்வாறு ஆரோக்கியமாக இருக்கும்???…

ஆன்மா:

உடம்பு மனது இது இரண்டையும் வாகனத்தின் இரு சக்கரம் போல் நாம் ஓரே நேர்கோட்டுப் பாதையில் நம்மளால இயக்க முடிந்தாள் அதன் முடிவில் நமது ஆன்மாவை அதாவது இறைசக்தியை உணர முடியும். ஆன்மா, இறைசக்தி, சலனமற்ற நிலை என்றேல்லாம் அழைக்கப்படுகிறது. சலனமற்ற நிலை என்றால் ஏதோ சும்மா இருப்பது என்று பொருள் அல்ல. வெளிப்படையாக பார்த்தால் இதன் வெளிப்பாடு பார்ப்பதற்கு ஏதோ பற்றற்று இருப்பது போல் தோன்றும்.

வெளி உலக மாயைகளை கண்ட கடல் நீர் அதை அடைய கடல் அலையாக எழுந்து கரையை கடக்க முயற்ச்சிக்கிறது. ஆனால், ஆவ்வாறான அலைகளுக்குத் தெரியாது தான் கடல் என்றும், தனக்குள் அமைதியான சலனமற்ற நிலையில் பல உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது பற்றி. இதேபோல் தான் நமது மனமும் தான் ஒரு ஆன்மா என்று தெரியாமல் இறை சக்தியை அடைய முயற்சிக்காமல் உலக மாயைகளை தேடி அலைமோதிக் கொண்டிருக்கிறது.

பற்றற்று இருப்பது சலனமற்று இருப்பது என்பதன் பொருள், தண்ணீரை அளவுக்குமீறி சூடாக்கி குளிர் ஆக்கி எடுத்து வைத்தாலும் தான் அது திரும்பி பழைய நிலைக்கே திரும்பிவிடும். ஒரு ரப்பர் பேண்டை எவ்வளவு இழுத்தாலும் எவனும் சுருக்கினாலும் அதன் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பி விடும். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், இயற்கையாகவே படைக்கப்பட்டதன் தன்மையை நாம் நிரந்தரமாக மாற்ற முடியாது தற்காலிகமாக நாம் மாற்றி வைத்துக் கொள்ள முடியுமே தவிர நிரந்தரமாக அதை நம்மால் மாற்றி வைக்க இயலாது. ஒவ்வொரு படைப்பிற்க்குக் இதுபோன்ற தனித்தன்மையான சலனமற்ற தன்மையை நாம் காணமுடியும். நம் கண்முன் தெரியும் கார் ஒரு இரும்பு. அதை இன்னும் ஆராய்ச்சி செய்து அருகில் சென்று பார்த்தால் அதற்குள் இருப்பது புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான், இது போன்ற நுன் அனுக்கள்தான் இருக்கும். ஒரு சிறிய விதையில் இருந்து பெரிய மரம் வளர்ப்பது போல, ஒவ்வொரு தனித்தனி படத்திற்கும் தனித்தனிப் பண்புகளும் இருக்கிறது.

இவ்வாறான படைப்புகளின் பரிணாம வளர்ச்சிக்கு அடுத்தடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதைப் போல, மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த நிலையை அடைவதற்கான அதாவது இறைசக்தி நிலைக்கு செல்ல யோகா உதவுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *