அர்த்த என்றால் பாதி. மத்ஸயேந்த்ரா என்பவர் பண்டைய காலத்து யோக ஆசிரியர்.

*தரையில் உட்கார்ந்து காலை நீட்டவும்.

*இடது காலை வளைத்து புட்டத்தைத் தூக்கி பாதத்தை பதிக்கவும்.

*வலது காலை மடக்கி இடது தொடைக்கு மேல் கொண்டு வரவும்.

*இடது கையை வலது முழங்கால் மேல் வைக்கவும்.

*உடம்பை 90 டிகிரி வலது பக்கம் திருப்பவும்.

*முழங்காலை சுற்றி இரண்டு கைகளும் சேர வேண்டும்.

இந்த நிலை மிகவும் கடினமானது. ஆகவே எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தாலும் நல்லது.

பலன்கள்:

உடல் இயக்கம் நன்றாக அமையும். வயிற்றுப் பகுதிகள் நன்றாக வேலை செய்யும். வாயு பிரச்சனைகள் தீரும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *