*தரையில் உட்கார்ந்து காலை நீட்டவும்.
*இடது காலை மடக்கி பாதத்தை தரையில் பதிக்கவும்.
*மூச்சை வெளிவிட்டு உடலை 90 டிகிரி இடது பக்கம் திருப்ப வேண்டும். வலது கையை இடது தொடைக்கு மேல் கொண்டு வரவும்.
*வலது கையை நன்றாக நீட்டி வலது முழங்காலுக்கப்பால் கொண்டு செல்லவும்.
*மூச்சை வெளிவிட்டு இடது கையை பின்னால் கொண்டு வந்து வலது கையை பிடிப்பதே இதன் இறுதி நிலை.
இந்த நிலை வருவதற்கு நீண்ட பயிற்சி தேவை.
இதேபோல் இன்னொரு பக்கமும் செய்ய வேண்டும்.
பலன்கள்:
குடல்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. உடலின் மேல் பகுதி நன்றாக வளையும், திரும்பும்.