ராஜா ஒரு பிசினஸ் மேக்னெட். கோடிகளிள் புரள்பவர். பணத்தான் அவரது பலம். ஆயுதம். அத்தனை பேரையும் பணத்தாலேயே அடிப்பார். போன வாரம் தனது கம்பெனியில் நடக்க இருந்த வேலை நிறுத்தத்தை கூட பணத்தால் தான் தடுத்து நிறுத்தினார். யூனியன் லீடரை பணத்தால் அடித்தார். வெற்றி!.
அன்றைக்கு ராஜா பொழுது போக்காக காட்டில் மான் வேட்டையாடினார். கொளுத்தமான். சரியான வேட்டை. சட்டம் பேசிய அதிகாரியை பணத்தால் அடித்தார்.
வீடு திரும்பும் வழியில் அவரது ஜீப் விபத்துக்குள்ளானது. பலத்த அடிபட்டு ரத்தக்கதியில் விழுந்து கிடந்தார் ராஜா. அவரை காப்பாற்ற வராமல் சாலை எங்கும் இறந்து கிடந்தது அவரது ‘பலம்’!…