சுப்த என்றால் படுத்தல். பாதாங்குஸ்தா என்றால் கட்டை விரல்.
*தரையில் மல்லாந்து படுக்கவும். கால்களை நன்றாக நீட்டவும்.
*மூச்சை இழுத்து வலது காலை மேலே தூக்கவும். கால் தரைக்கு செங்குத்தாக இருக்க வேண்டும். இடது கையை இடது தொடை மேல் வைக்கவும்.
*வலது கையை தூக்கி வலது கட்டை விரலைப் பிடிக்கவும்.
*மூச்சை வெளிவிட்டு உடலை தூக்கவும். முகம் இடது முழங்காலில் பதிவதுதான் இந்த ஆசனாவில் இறுதி நிலை.
இந்த நிலையில் அரை நிமிடம் இருக்கவும்
இதேபோன்று இன்னொரு பக்கமும் செய்ய வேண்டும்
பலன்கள்:
கால்கள் நன்றாக வடிவம் பெறும். கோணல் மாணல் இல்லாமல் நேராக, வலுவாக இருக்கும். SCIATICA என்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல பலன்.