தடா என்றால் மலை. மலை போல் உறுதியாக அசையாமல் நேராக நின்றால். இதை சமஸ்திதி என்றும் சொல்லலாம்.
*பின் கால்களும் கட்டை விரல்களும் ஒன்றையொன்று தொட்டுக் கொள்கிற வகையில் பாதங்களை ஒட்டி வைத்து நேராக நிற்க வேண்டும். பாதங்களை தரையில் அழுத்தி வைக்க வேண்டும். விரல்களை நன்றாக நீட்டி தரையில் சமமாக அழுத்த வேண்டும்.
*முழங்கால் சிறிய அளவு கூட மடங்காமல் நேராக, விறைப்பாக இருக்க வேண்டும்.
*வயிறை உள்வாங்கி, மார்பை முன் தூக்கி முதுகெலும்பை மேலிழுத்து கழுத்தை நேராக்க வேண்டும்.
*உடல் எடை ஒருபக்கம் மட்டும் அதிகமாக இருக்காமல் பாதத்தில் சமமாக இருக்க வேண்டும்.
*கைகளை மேலேயும் தூக்கலாம். பக்கவாட்டிலும் தொங்க விடலாம்.
பலன்கள்:
தடாசனாவின் மூலம் இடுப்பு சுருங்கி, வயிறு உள் தள்ளி, மார்பு விரிவடைகிறது. இதனால் உடல் தக்கையாகி மனம் தெளிவாகிறது. சரியாக நிக்காவிட்டால் இடுப்பு இளகி, வயிறு முன்தள்ளி, உடல் பின் நெளிந்து முதுகு எலும்பு பாதிக்கப்பட்டு உடல் சோர்வடைகிறது. மனமும் சோர்வடைகிறது…