“நாட்டுல மனிதாபிமானமே செத்துப்போச்சு கலா! அவானவனுக்கு சுயநலம்தான் பெரிசா இருக்கு” என்றான் மனைவியிடம் வருத்தமாக.
“என்னங்க ஆச்சு?” என்றாள்.
“வர்ற வழியில ஒரு ஆக்சிடெண்ட்! ஆட்டோ டிரைவர் ஸ்பாட்லயே காலி போல! உடள்ளே ஒரு பெரிய அடிபட்டு கிடக்கிறார். அவர் சம்சாரத்துக்கு நல்ல அடி. ‘அய்யோ யாராவது வந்து உதவி பண்ணுங்கன்’னு பரிதாபமாய் கதரிட்டு இருக்காங்க. ஆனா, ஒருத்தனாவது உதவிக்கு போகணுமே…? அத்தனை பேருக்கும் பயம். பாழாய் போன பயம் போலீஸ்காரர், விசாரணை, கோர்ட்னு அலைவதற்கு பயம். சுயநலம் புடிச்ச ஜனங்க!”.
“நீங்க என்ன பண்ணீங்க?”
“என்ன கேட்கிற நீ? அங்கே என்ன என் மாமனாரா மேனேஜரா இருக்கான்? டயத்துக்கு ஆபீஸ் போகலைன்னா சீட்டு கிழித்து விடுவேன், தெரியும் இல்ல?”…