“வணக்கமுங்க! டவுன்ல ஒரு கடை போடலாம்னு இருக்கேன். லோன் கொஞ்சம் ஜாஸ்தியா கொடுத்து தந்தீங்கன்னா உதவியா இருக்குமாங்க. ஐயா இங்க இருக்கும்போதே முடிச்சு கொடுத்தா நல்லா இருக்கும். ஒரு வகையில் ஐயா என் சம்சாரத்துக்கு பெரியப்பா முறை என்று வீட்டில் சொல்லுச்சு. நாமதானுங்க நம்ம ஆளுங்களுக்கு கை தூக்கி விடணும்…” பேங்க் மேனேஜரிடம் குழைந்து பேசி காரிய சாதகம் செய்து கொண்டு பின் கடைக்கு திரும்பினால் கணேசன்.
“சித்தப்பா… அம்மா கொஞ்சம் புளி வாங்கி வர சொல்லிச்சு!” என்று வந்து நின்றான் சிறுவன் ராமு. ஒன்றுவிட்ட உறவு முறை.
கனெக்சனுக்கு வந்ததே கோபம்… “ஆமா, உங்க ஆத்தாளுக்கு வேற வேலையே கிடையாது! சொந்தக்காரன் ஒருத்தன் முன்னுக்கு வந்துட்டான்னு தெரிஞ்சா போதுமே… நொய்நொய்னு அரிச்சு புடிங்கிடுவாளே! ஓடிப் போய் புளிக்கு காசு வாங்கிட்டு வா, ஓடு!”…