உபகரணங்களை பயன்படுத்தி TRICEPS WORKOUT செய்வது எப்படி???
கையின் மேற்பகுதிக்கு அதிக அழகு சேர்ப்பதே இந்த TRICEPSதான். கையின் வடிவமைப்பையும், அதன் பலத்தை பற்றியும் தார்த்தலே தரிப்படுத்துவது TRICEPSதான். இந்த TRICEPSக்கு பல உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான பயிற்சிகளை பற்றி பார்க்கலாம். இந்த உடற்பயிற்சி செய்வதற்குமுன் வார்ம் அப் செய்வது முக்கியம்.
- Cable Push Down Triceps
- Close Grip Bench Press
- Dumbbell Extension
- Incline Triceps Extension
- Machine Triceps Extensions
- Narrow Grip Push Up
1.Cable Push Down Triceps
இந்த பயிற்சி செய்வதன் மூலம் TRICEPS மட்டும் அல்லாமல் FOREARMSம் பயிற்சிசெய்வப்பட்டு பலப்படுத்தப்படுகிறது. நேராக நின்றுகொண்டு எடையை மேலிருந்து கீழலாக இழுப்பதன்மூலம் கைகள் புலப்படுகின்றன.
2.Close Grip Bench Press
இந்த பயிற்சி செய்வதன் மூலம் இதய(CHEST) தசைப்பகுதிகள், தோள்பட்டைகள், மற்றும் இதனுடன்சேர்ந்து TRICEPSம் பயிற்சிசெய்யப்பட்டு பலப்படுத்தப்படுகின்றன. மேசையில் படுத்துக்கொண்டு இரு கைகளுக்கும் அருகில் எடையை பிடித்து, கைகள் இதயத்தின் (CHEST) நடுப்பகுதியில் தொட்டுவிட்டு எடையை மேலே தூக்குவதன்மூலம் பயிற்சி செட்டப்பட்டு தசைகள் பலப்படுத்தப்படுகின்றன.
3.Dumbbell Extension
இந்த பயிற்சி செய்வதன் மூலம் TRICEPSல் வடிவமைப்பு கிடக்கிறது. தசைப்பகுதிகளும் பலப்படுத்தப்படுகிறது. நேராக உட்க்கார்ந்து எடையை தலைக்கு மேல் தூக்கி கை மூட்டுகளை மட்டும் புன்புறமாக மடித்து எடையை மேலும் கீழுமாக தூக்குவதன்மூலம் பயிற்சிசெய்யப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம் விரைவில் தசையின் பலத்தையும், வடிவமைப்பையும், தசைகள் பெரிதாவதையும் பார்க்க முடியும்.
4.Incline Triceps Extension
இந்த பயிற்சி செய்வதன் மூலம் TRICEPS மட்டும் அல்லாமல் முழு கைகளும் அதிக பலப்படுத்தப் படுகின்றன.படுத்துக்கொண்டு கை மூட்டுகளை மட்டும் கடக்கி எடையை கீழிருந்து மேலாக தூக்கி பயிற்சி செய்வதன் மூலம் கைகளுக்கு அதிக பலம் கிடைக்கிறது.
5.Machine Triceps Extensions
இந்த பயிற்சி செய்வதன் மூலம் TRICEPS மட்டும் பயிற்சி செட்டப்பட்டு அதிக பலமடைகிறது. கையின் FOREARMSஐ பயன்படுத்தி எடையை கீழ்நோக்கி அமுக்குவதன் மூலம் TRICEPSக்கு மட்டும் தசைப்பகுதிகள் இறுக்கமாகி தேவையில்லாத கொழுப்புகள் குறைந்து பலப்படுகிறது.
6.Narrow Grip Push Up
மேலே பார்த்த அனைத்து TRICEPSற்கான உடற்பயிற்சியையும் விட அதிகமான சக்தியை கொண்ட உடற்பயிற்சி இது.இதை செய்வதன் மூலம் TRICEPS மட்டும் அல்ல மொத்த உடலுமே அதிக பலப்படுத்தப் படுகிறது. உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள தேவையற்ற கொழுப்புகல் குறைந்து தசைகள் இறுக்கப்பட்டு பலப்படுத்தப்படுகின்றன.