நாம் அனைவரும் சந்தோஷாமாகவும் நிம்மதியாகவும் இருக்கவே ஆசைப்படுகிறோம். ஆனால் நம் மனமோ பெரும்பாலான நேரங்களில் கவலையிலும் பயத்திலும் கோபத்திலும் மற்ற எதிர்மறையான எண்ணங்களிலுமே உழன்று கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் நம் மனமானது நிகழ்காலத்தில் நாம் செய்யும் செயலில் இல்லாததே ஆகும்.
எப்போது ஒருவர் தன் கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை பற்றி சிந்திக்கிறாறோ அப்போது அவர் மனம் கவலையை ஆட்கொள்கிறது. எப்போது ஒருவர் தன் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கிறாறோ அப்போது அவர் மனமானது பயத்தினால் மிரல்கிறது. உதாரணம் : நாளை கடன்காரன் வீட்டிற்கு வந்து விடுவானோ? அடுத்த மாதம் என் உறவினர் வீட்டிற்கு செல்லும்போது விபத்து ஏற்பட்டு விடுமோ? இது போன்றவைகளாகும். மைண்ட் புல் நெஸ் என்பது நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்துவது ஆகும். எப்போது ஒருவர் தன் நிகழ்காலத்தில் தான் செய்யும் செயலில் முழு கவனம் வைத்து. முழு ஈடுபாட்டுடன் செயல்படுகிறாறோ அப்போது அவரால் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் உணரமுடியும். எல்லாவிதமான மன சிக்கல்களுக்கும் மனநல பிரச்சினைகளுக்கும், இந்த மைண்ட் புல் நெஸ் டெக்னிக்ஐ பயன்படுத்தி அவற்றிலிருந்து விடுபடலாம். மனச்சோர்வு, மனப்பதட்டம். மன அழுத்தம் போன்றவற்றை சரிசெய்ய இந்த டெக்னிக் காக்னிடிவ் பிஹேவியர் தெரபியை பயன்படுத்தி உளவியலாளர்கள் நோயாளிகளை குணபடுத்துகிறார்கள். இதுமட்டுமில்லாமல் ஒ சி டி – என்று சொல்லக் கூடிய எண்ண சுழற்சி
நோய், கோபம், தாழ்வு மனப்பான்மை போன்றவற்றிலிருந்தும் வெளிவர இந்த டெக்னிக்கை உளவியலாளர்கள் பயன்படுத்துகின்றார்கள்.
சரி இப்போது மைண்ட் புல் நெஸ் டெக்னிக்கை செய்து பயன்பெறும்
வழிகளைப் பற்றி பார்போம்.
1:
இந்த டெக்னிக்கை ஒரு தியானமாக செய்ய முதலில் உங்களுக்கு
சவுகரியமான இடத்தில் அமார்ந்து கொண்டு கண்களைமூடி உங்களது
எண்ணங்கள் உடலில் ஏற்படும் உணர்வுகள் உங்களது சுற்றி நிகழும் நிகழ்வுகள் உங்கள் மூக்கினால் நுகர்வும் மணங்கள்
போன்றவற்றை கவனிக்க வேண்டும். நிகழ்காலத்தில் நிகழும் நிகழ்வுகளில் உங்கள் மனதைலியிப்பதுவே மைண்ட் புல் நெஸ் தியானம் ஆகும்.
2:
அடுத்ததாக இதை மைண்ட் புல் நெஸ் ப்ரீத் திங் ஆக செய்யலாம். இந்தப் பயிற்சியை செய்வதற்கு. அமைதியான இடத்தில் அமார்ந்து கண்களை மூடிக் கொண்டு உங்கள் மூச்சை கவனிக்க வேண்டும். நீங்கள் எவ்வாறு உங்கள் மூச்சை உள்யிடுகிறிர்கள் நீங்கள் மூச்சை வெளியிடுகிறீர்கள் என முழு கவனத்தையும் உங்கள் நிகழ்காலத்தில் சுவாசத்தில் இப்பயிற்சியாகும்.
3:
கவனம் செலுத்துவதே
இது போன்று மைண்ட் புல் நெல் வாக்கிங்ல் நீங்கள் நடைப்பயிற்சி செய்யும்போது அப்பயிற்சியின் மீது முழு கவனம் வைத்து ரசித்து அனுபவித்து கவனிப்பது ஆகும்.
4:
அதேபோல் மைண்ட் புல் நெஸ் ஈட்டிங் இதில் நீங்கள் உணவு உண்ணும் போது உணவின் ருசியை அதன் பலனை உணர்ந்து ரசித்து ருசித்து மற்ற விஷாயங்களில் கவனம் செலுத்தாமல் முழு கவனத்தையும் உணவின் மீது செலுத்துவதே இப்பயிற்சியாகும். இப்பயிற்சிகளை தனியாக அமார்ந்து தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலிலும் முழு கவனம் வைத்து கடந்த காலத்தைப்பற்றியோ அல்லது எதிர்காலத்தைப் பற்றியோ கூடியவரையில் சிந்திக்காமல் நிகழ்காலத்தின் மீது கவனம் வைத்து ஈடுப்படுவதே இந்த மைண்ட் புல் நெஸ் டெக்னிக் ஆகும்.