Tag: கதைகள்

அது எப்படி?

கோயில் திருவிழாவில் ஒரு சிலர் பக்தியில் சாமியாட, சாதாரணமா பார்த்துக் கொண்டிருந்த அப்பாவிடம், ஆச்சரியமாய் பார்த்து கேட்டான் மகன், கோவில் உள்ளே ஒரு சாமி தானேப்பா இருக்கு..! அப்புறம் எப்படி இத்தனை பேருக்கு சாமி வரும்?

வியாபாரம்

குடிநீர் வரவில்லையென ஊர் தலைவர் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் ஊர் தலைவர், “இன்னும் கொஞ்ச நேரத்துல தண்ணீர் வண்டியை வர சொல்றேன் ஒரு குடம் 15 ரூபாய்” என்றார்.

உறவு

தன் தாய் மாமா வைத்துள்ள மெடிக்கல் சென்று, ” எனக்கு காய்ச்சல் மருந்து கொடுங்க மாமா” என்றால் ஜோதிகா. “எத்தனை வேளைக்கு?” என்றார் பழக்க தோஷத்தில் கவலைப்படாமல்.

ஓட்டும் – பாட்டும்

தெரியாமல் காலர் டியூன் ஆக்டிவேட் செய்த மகனே, “நமக்கு கால் பண்ணி வேற ஒருத்தன் பாட்டு கேக்குறதுக்கு நாம ஏன் காசு கொடுக்கணும்” என கடிந்து அப்பாவிடம், ” வேறு ஒருத்தன் சம்பாதிக்க நீங்க ஏன் ஓட்டு போடணும்” என்றால் மகன்.

அறி(வு)விப்பு

‘இங்கே புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது, சுற்றுச்சூழலை காப்பீர்’ எனும் அறிவிப்பு பலகையுடன் இயங்கிக் கொண்டிருந்தது அந்த ரப்பர் தொழிற்சாலை.