நாம் நமது அன்றாட வாழ்வில் பல மனிதர்களை சந்திக்கிறோம், பழகுகிறோம், அவர்களுடன் பணி செய்கிறோம். ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு உணர்ச்சியின் கீழ் வசப்பட்டு அதற்க்கு அடிமையாகிவிடுகிறோம். ஒவ்வொரு உணர்ச்சியில் பல நன்மைகளும் உள்ளன பல தீமைகளும் உள்ளன. அதாவது,இது கூறுவது என்னவென்றால் “(1) அளவுக்கு மீறினால் அமிர்தமும் ? ” ஏன் இந்த கேள்விக்குறி ?, உங்களுக்கு இந்த பழமொழி தெரிந்தால் அதை கீழே உள்ள COMMANT BOXல் பதிவிடுங்கள். ஒவ்வொரு உணர்ச்சிக்கும் அதை கையாளும் முறை இருக்கிறது. உணர்ச்சியை கையாள தெரிந்தவர்கள் பல துறைகளில் சாதிக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் உணர்ச்சியின்மூலம் தன்னை கட்டுப்படுத்துவதுமட்டுமல்லாமல் பிறரையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். நேரத்திற்கு ஏற்றாற்போலும், தன்னுடைய தேவைக்கு ஏற்றாற்போலும் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தி சாதிக்கிறார்கள்.
Pic-1: Emotions
1- எண்ணம்போல் வாழ்க்கை.
பல ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்ததுதான் இந்த பூமி. இயற்கையின் பல அதிசயங்கள் நிறைந்து காணப்படுகிறது. “(2) கற்றது கை அளவு கல்லாதது ?” இதையும் COMMANT BOXல் பதிவிடுங்கள். நாம் இப்போது பூமியை பற்றி பார்க்கப்போவதில்லை, பூமியைவிட பல மடங்கு ஆச்சரியங்களும், அதிசயமும், விஞானமும், ஆன்மீகமும் கலந்து காணப்படும் பிரபஞ்சத்தின் செயலில் உணர்ச்சியின் பங்கு என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
Pic-2: Think Positive
நாம் பிறருக்கு என்ன நினைக்கிறோமோ அதுவே நமக்கு நடக்கும் என்பதற்கு பல கதைகள் இருக்கின்றன. இது நாம் தெரிந்த ஒன்று. நமது ஒவ்வொரு நினைவும் பிரபஞ்சத்தின் சக்திக்கும் உள்ள தொடர்பின் வெளிப்பாடுதான் அவைகள். தடைகளை கூட வாய்ப்பாக மற்றும் சக்தி கொண்டதுதான் பிரபஞ்சம். நம்மளை சுற்றி நடப்பவர்கள் நல்லதாகவும், தீயதாகவும்கூட இருக்கலாம், ஆனால் நாம் நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு, கெட்டவைகளை பற்றிய எண்ணத்தை நிறுத்துவது நம்முடைய மனதை நேர்மறையான பாதையில் கொண்டுசெல்லும் பயிற்சி. நமது மனதில் எழும் எந்த உணர்ச்சியும் கட்டுப்படுத்தி அதை ஆரோக்கியமான உணர்ச்சியின்மூலம் வெளிப்படுத்தவேண்டும்.
2- அனைத்திலும் திருப்திகொள்.
திருப்தி அடைந்த நிலையும், நாம் மனமகிழ்ச்சி அடைந்த நிலையும் ஒன்றுதான். நமது மன மகிழ்ச்சி நமது மனதிற்கும் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமானது. எனவே நமது மனமகிழ்ச்சியில் அதிக கவனம் இருக்க வேண்டும். இன்னொரு உண்மை என்னவென்றால் யாரையும் நாம் முழு திருப்தி பண்ணமுடியாது. ஆனால் அவரவரின் மனம் திருப்தி அடைவது அவரவரின் மனத்தை பொறுத்தது.
Pic-3: Be Satisfied
நமது மனதை நாமே திருப்தியடையும் நிலையில் வைத்துக் கொள்ளலாம். நமது மனதிற்கு விருப்பமான செயல்களை செய்வதன்மூலம் நமது மனதை திருப்தி அடையும் நிலையில் வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் நமது மனமகிழ்ச்சி விலைமதிப்பற்றது. நமது மனா மகிழ்ச்சிக்கு நமது உடல் ஆரோக்கியமும் மிக முக்கிய காரணம் ஆகும். அதுமட்டும் அல்ல வேலை, குடும்பம், சொந்தபந்தங்கள், நண்பர்கள் இவர்களும் நமது மனநிம்மதிக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
3- சிறிய எண்ணம் பெரிய வெற்றி.
வெற்றி பெற வேண்டும் என்பது நாம் பலரின் இலக்காக உள்ளது. வெற்றிக்கும் மனதிற்கும் பெரிய தொடர்பு உள்ளது. நமது எண்ணங்களே வெற்றியாக மாறுகிறது. நமது எண்ணங்களுக்கு ஏற்ப அது தனக்குண்டான நேரத்தை எடுத்துக்கொள்கிறது. சிறிய எண்ணங்கள் விரைவாகவும், பெரிய எண்ணங்கள் அதிக நேரத்தையும் எடுத்துக்கொள்கிறது.
Pic-4: Grow
பெரிய எண்ணம் அதிக நேரத்தை எடுக்கும் என்று நாம் பார்த்தோம். நமது எண்ணம் பெரிதாக இருந்தால் அது கிடைக்கவில்லை என்று திகைத்து, வெறுப்பு வருவதன்மூலம் சோம்பேறியாகிவிடுகிறது. அடைய முடியாதவற்றை எண்ணக்கூடாது. எதற்கும் ஆரம்பம் ஒரு சிறிய செயல்தான்.
4- மன அழுத்தத்தை கையாளுதல்.
நமது எந்தஒரு சிறிய எதிர்பார்ப்பிலும் அதிருப்தி ஏற்படும்போது மனம் சோர்வடைந்து மன அழுத்தத்தில் கொண்டுபோய் விடுகிறது. அது வீட்டிலோ அல்லது வீட்டிற்கு வெளியிலோ, அலுவலகத்தில் என்று எங்கு வேண்டுமானாலும் அதாவது நமக்கு எதிர்பார்ப்பு ஏற்படுகின்ற எந்த இடத்திலும் மன அழுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
Pic-5: Depression
எந்தஒரு எதிர்பார்ப்பும் நமக்கு நஷ்டத்தை தரலாம். நாம்தான் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் வித்தையை தெரிந்துகொண்டோமே, பிறகுஎன்ன. மனம் சோர்வாகவோ, மன அழுத்தத்திலோ உள்ளபோது நாம் செய்யவேண்டிய செயல் தனிமை. 10 நிமிடம் தனியாக அல்லது நமது நலன்விரும்பிகளுடன் அமர்ந்து இதன் தோற்றத்தை பற்றி தெரிந்து பின் அதை எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றி சிந்தித்து அதை நடைமுறை படுத்த வேண்டும். எவ்வளவு பெபிரச்சனையாக இருந்தாலும் அதற்க்கு ஒரு சில மணிநேர தனிமையே போதுமானது. மன அழுத்தத்தை இன்னும் ஆரோக்கியமான முறையில் கையாள வேண்டும் என்று நினைத்தால் யோகா பயிற்சி செய்வது சிறந்தது. தனிமையில் தன்னை ஆழமாக சிந்தித்து உணர்வைத்தான் மூலம் அதிக பலன் கிடைக்கும்.
Pic-6: Be Happy
5- புதிய செயல்களில் ஈடுபடுங்கள்.
நமது மன மகிழ்ச்சி மிக முக்கியமானது, மனம் மகிழ்ச்சியாக இருக்க நமது மனதிற்க்கு விருப்பமானதை செய்ய வேண்டும் என்பனவாற்றை பார்த்தோம் அல்லவா, அதைத்தான் இங்கு பார்க்கப்போகிரோம். நாம் செய்யும் செயல் மூலம் நமது மனம் மட்டும் மகிழ்ச்சி அடையக் கூடாது. மனதின் பக்குவமான வளர்ச்சிக்கு ஏற்ப்ப அறிவும், அனுபவமும், இளமையும், ஆளுமையும் பக்குவபட்டு வளரவேண்டும்.
pic-7: Search Our Opportunity
நமது மனதிற்க்கு விருப்பமான செயல் என்ன என்பதை தேட வேண்டும். ஆனால், மனதின் ஆற்றல் என்பது , நாம் எதை ஏற்றுக்கொள்ள சொன்னாலும் அதை நமக்கு விருப்பமானதாகவோ அல்லது மனதலவில் அதை ஏற்றுக்கொள்வதுதான். எனவே நாம் எதையாவது தொடர்ந்து செய்வதன்மூலம் மனம் அதை ஏற்கிறது. புது புது மனிதர்களை பார்ப்பது, பழகுவது, உதவுவது, புதிய இடங்களுக்கு செல்வது, மனதிற்க்கு வருப்பமானவர்களுடன் அதிக நேரம் செலவிடுவது, புதிய புத்தகங்களை படிப்பது, இசைகளை கேட்பது, புதிய திறமையை வளர்க்க முயல்வது, புதிய உருவாக்கங்களில் ஈடுபடுவது போன்ற positivaன செயல்களில் அதிக கவனம் செலுத்தி அதை தங்களில் தேடுதலாக மாற்றுவதன்மூலம் நமது மனநிலை அதிக பக்குவ நிலையை அடையும்.